நாடு முழுவதும் வங்கிகள் 2 நாட்கள் ‘ஸ்டிரைக்’; வங்கிகள் கூட்டமைப்பு அறிவிப்பு!

நாடு முழுவதும் வங்கிகள் 2 நாட்கள்  ‘ஸ்டிரைக்’; வங்கிகள் கூட்டமைப்பு அறிவிப்பு!
Published on

நாட்டில் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து வருகிற 16-ம் தேதி மற்றும் 17-ம் தேதிகளில் நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் பொதுத்துறை வங்கிகள் மூலம், 13 தனியார் நிறுவனங்களுக்கு, 4.86 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அந்தக் கடன் முறையாக செலுத்தப்படாததால், இந்த வங்கிகளுக்கு, 2.85 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால், நஷ்டத்தில் இயங்கும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை மீட்க அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் பொதுத்துறை வங்கிகள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சி நடக்கிறது.இது தொடர்பான மசோதாவை பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்லது. அதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, வருகிற 16-ம் தேதியும் 17-ம் தேதியும் நாடு தழுவிய அளவில், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com