நாட்டு எல்லையை விரிவாக்க சீனா புதிய சட்டம்: இந்திய எல்லையில் பரபரப்பு!

நாட்டு எல்லையை விரிவாக்க சீனா புதிய சட்டம்: இந்திய எல்லையில் பரபரப்பு!
Published on

சீனா தன் நாட்டு எல்லையை விரிவாக்கும் புதிய சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது குறித்து இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது.

சீனா தன் நாட்டு எல்லையை விரிவாக்கம் செய்ய புதிய சட்டத்தை நிறைவேற்றி வர்ருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சீனா லடாக் கிழக்கு எல்லையில் தன் படைகளை குவித்துள்ள நிலையில் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

சீனாவின் இந்த புதிய சட்டம் குறித்து இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போது இந்திய எல்லையில் படைகளை நிறுத்தி வைத்துள்ள சீனா, பின்பு சட்ட ரீதியாக அந்த பகுதிகளை உரிமை கோருமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதனால் சீனாவின் நடவடிக்கையை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறட்து.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்திய –சீன எல்லைப் பகுதிகளில் சீனா புதிய கிராமங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com