நடிகர் அஜீத்தில் வலிமை பட ரிலீஸ் தள்ளிவைப்பு!

நடிகர் அஜீத்தில் வலிமை பட ரிலீஸ் தள்ளிவைப்பு!

Published on

நடிகர் அஜீத்நடித்து, போனிகபூர் தயாரித்துள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அந்த விஷ்யம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் லைக்ஸ் அள்ளியது.

இந்நிலையில் வலிமை படம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் வெளியிடப் படும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அஜீத் ரசிகர்கள் மட்டுமன்றி பலதரப்பினர் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை அந்த படம் ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அப்படத்தின் ரிலீஸ்தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போனிகபூர் சார்பில் வலிமை படத்தின் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டதாவது:

உலகம் முழுவதும் ஒமிக்ரான் உள்ளிட்ட கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால், ரசிகர்களின் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு 'வலிமை' பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப் படுகிறது. கொரோனா கட்டுக்குள் வந்து நிலைமைசீரானபின்பு வலிமைதிரைப்படம்வெளியிடப்படும்.

-இவ்வாறு வலிமை படத்தின் தயாரிப்புதரப்பில்கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com