நீரின்றி அமையாது உடல்!

சர்வதேச தண்ணீர் தினம் (22.03.2024)
Neerindri Amaiyaathu Udal!
Neerindri Amaiyaathu Udal!https://ta.quora.com

மது உடலின் பெரும் பகுதி நீரினால் ஆனது. அதில் ஆண்களின் உடல் 60 சதவீதமும், பெண்களின் உடல் 50 முதல் 55 சதவீதமும் நீரால் ஆனது. உணவு செரிமானமாவதற்கு, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு, உடலின் உயிரணுக்கள் சத்துக்களையும், உயிர் வாயுவை பெறுவதற்கு தண்ணீர் அவசியம் தேவை. மூச்சு விடுதல், வியர்த்தல், சிறுநீர் கழித்தல் போன்றவற்றின் மூலம் ஒருவருக்கு நீர்ச்சத்து குறைகிறது. இதன் அளவு குறையும்போது செய்யும் வேலையில் கவனச்சிதறல், மயக்கம், களைப்பு, சில நேரங்களில் தலைவலி என உடல் பிரச்னைகள் மூலம் நீரின் அளவு குறைவதை நமக்கு நமது உடல் உணர்த்துகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைவதுதான் அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகிறது. உடலின் சரும ஆரோக்கிய ரகசியம் நீர்ச்சத்தில்தான் உள்ளது. தலைவலி, உடல்வலி, உடலில் எரிச்சல், உலர்ந்த சருமம் வரை அனைத்திற்கும் நீர்ச்சத்து குறைவே காரணமாக இருக்கிறது என்கிறார்கள் நியூயார்க் வெர்ஜினியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். எனவே, போதுமான அளவுக்கு தண்ணீர் குடியுங்கள். அதுவும் தாகம் எடுக்கிற நேரங்களில் மட்டுமே என்கிறார்கள்.

நமது உடலுக்கு தினமும் பெண்களாக இருந்தால் 1.8 லிட்டரும் (200 மில்லி கிளாஸ்-8), ஆண்களாக இருந்தால் 3 லிட்டரும் (200 மில்லி - 10 கிளாஸ்) தேவை என்கிறார்கள் ஜரோப்பியன் புட் சேப்டி அத்தாரிட்டி ஆய்வாளர்கள். தண்ணீர் என்றால் அது சுத்தமான தண்ணீர்தான். காபி, டீ, குளிர் பானங்கள் இதில் சேராது. தினமும் பழச்சாறு என்றால் 150 மில்லி கிராம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ஒருவரின் வயது, உடலமைப்பு, உடல் நிலை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நிலவும் வானிலையைப் பொறுத்து அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டிய தண்ணீர் அளவு அமைகிறது.

கோடைக்காலத்தில் வியர்த்து விடுவதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 10 லிட்டர் வரை தண்ணீர் அளவு குறையக் கூடும். 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு தினமும் குறைந்தது 18 முதல் 24 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.

பொதுவாக தாகம் எடுப்பது சில சமயங்களில் வெளியே தெரியாது. களைப்பு, மயக்கம் மற்றும் கவனச்சிதறல் மூலம்தான் இது தெரிய வரும். அந்த மாதிரி நேரங்களில் டேபிள், சமையல் அறைகளில் உள்ள தண்ணீரை எடுத்து குடித்து விட வேண்டும். சில நேரங்களில் போதுமான நீர்ச்சத்து உடலில் இருப்பதை நாம் கழிக்கும் சிறுநீரின் நிறத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். அடர் மஞ்சள் நிறம் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை உணர்த்தும்.

அதிகளவில் தண்ணீர் குடிப்பதும் ஆபத்தானதுதான். அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓட வேண்டியது இருக்கும். எனவே, அளவாக ஒரு நாளைக்கு சராசரியாக 8 கிளாஸ் தண்ணீர் நீர் பருகுவதுதான் நல்லது. அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது அல்லது மடக்மடகென்று வேகமாக தண்ணீர் குடிப்பது சில நேரங்களில் மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் எடுத்துகொள்ள, அதுவே உடலில் நச்சுத் தன்மையை ஏற்படுத்துவதுடன், அளவுக்கு அதிகமான சோடியம் உப்பு நம் இரத்தத்தில் குறைய வைத்து உடலில் மந்தநிலையை ஏற்படுத்தும். அது சில நேரங்களில் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

இதையும் படியுங்கள்:
குப்பை வாதங்களை ஒதுக்கித் தள்ளுங்கள்!
Neerindri Amaiyaathu Udal!

வயதானவர்களுக்கு பொதுவாக தாகம் எடுப்பதே தெரியாது. தண்ணீர் குடித்தால் பாத்ரூம் போக வேண்டும் என கூட தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரக தொற்றுக்கு ஆளாவார்கள். இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நீர் பருக வேண்டும். வயதான காலத்தில் உடலில் நீர்ச்சத்துடன் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், இதய மற்றும் நுரையீரல் நோய்களின் ஆபத்துகளிலிருந்து விலகி இருப்பதாக நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் ஆய்வு கூறுகிறது.

குழந்தைகளுக்கு 5 வயது வரை நீர் ஆதாரமாக பாலும், தண்ணீரும் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு ஜூஸ், பழச்சாறு, சத்து பானம் என்று எதுவும் கொடுக்கக் கூடாது என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். அது அவர்களின் பிற்கால வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

நீண்ட நேரம் கார் ஓட்டுகிறவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சாலைகளில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்வார்கள். எப்படி ஒருவர் மது போதையில் தவறு செய்வாரோ, அப்படி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகுவோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com