நேபாளத்தில் பிரபலமான ‘ஒட்டாக்கு ஜட்ரா’ விழா: விதவிதமான கார்ட்டூன் வேடங்களில் இளைஞர்கள்!

நேபாளத்தில் பிரபலமான ‘ஒட்டாக்கு ஜட்ரா’ விழா: விதவிதமான கார்ட்டூன் வேடங்களில் இளைஞர்கள்!

Published on

நேபாளத்தில் ஒட்டாக்கு ஜட்ரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு முதல்வாரத்தில் கோலாகலமாக நடைபெறும். கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிரபலமடைந்துள்ள இந்த ஒருநாள் திருவிழாவில் இளைஞர்கள் விதவிதமாக பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து கலந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் நேபாளத்தில் இந்த வருடமும் ஏராளமான இளைஞர்கள் காட்டூன் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து மேடையில் தோன்றினர்.

தலைநகர் காட்மாண்டுவில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா மேடைகளில் பல வித கார்ட்டூன்கள் வேடங்கள் அணிந்து வந்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றில் பிரபலமாக உள்ள கதாபாத்திரங்களை போன்றே இளைஞர்கள் ஆடை, அணிகலன்களை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.

நேபாளத்தில் இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் இந்த ஒருநாள் திருவிழாவை காண இன்று நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேபாளத்தில் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com