ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றினார்கள்: பிஜேபி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!

ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றினார்கள்: பிஜேபி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பிரதமரை நீங்கள் திரும்பிப்போ என்று கூறினாலும் அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது.

தமிழகத்தில் வெற்று அரசியலுக்காக ஒற்றை செங்கலை காட்டி மக்களை ஏமாற்றினார்கள். ஆனால், பிரதமரை நீங்கள் ''திரும்பிப்போ'' என்று கூறினாலும், அவரால்தான் ரூ. 2000 கோடி முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது என்று பிஜேபி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக வானதி சீனிவாசன் மதுரை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகிறபோது அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் வரும்போது ''கோ பேக்மோடி'' என கூறினர். ஆனால், அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தொடர்ச்சியாக ஜப்பான் நிதி உதவி கிடைத்தால்தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது. இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். சரி.. நான் கேட்கிறேன்.. இவர்கள் எய்ம்ஸ் கட்டுமான பணியை துவக்கி விட்டார்களா? ஆட்சிக்கு வந்து 7 மாத காலமாகியும் இன்னும் ஒற்றை செங்கலை கையில் வைத்துகொண்டு ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் அரசியலுக்காக ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com