பாட்டி பேரன் பாசம்!

பாட்டி பேரன் பாசம்!

Published on

Hemalatha Srinivasan

குட்டிக்கண்ணா.. குழந்தை வடிவே
குலக் கொழுந்தே.. குதூகலத்தின் ஊற்றே!
என்முகம் வாடினால் பொறுக்கமாட்டாய்.
நீ கண்கலங்கினால் நான் பொறுக்கமாட்டேன்
பெற்றோர் உன்னைக் கடிந்தால்
நீ தஞ்சம் புகுவது என்னிடமன்றோ!
உன் அபரிமிதமான ஆங்கிலமும்
அனைத்தையும் நொடியில் புரிந்துகொள்ளும் உன் ஆற்றலும்
நான் வியக்காத நாளில்லை1
ஒரு நாளில் என் பெயரை அதிகம் உச்சரிப்பது நீதான்!
என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் அன்பே!
உன்னைப் பேரானாய்ப் பெற்றதில்
நான் பிறவிப்பயன் அடைந்தேன்!

logo
Kalki Online
kalkionline.com