பளீர் சிவப்பு கலரில் போலீஸ் ரோந்து கார்கள்; சென்னை சாலைகளில் அசத்தல்!

பளீர் சிவப்பு கலரில் போலீஸ் ரோந்து கார்கள்; சென்னை சாலைகளில்  அசத்தல்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னையில் புத்தம் புதிய சிவப்பு நிற கார்களீல் ரோந்து போலீஸார் வலம் வந்தனர்.

சென்னை காவல்துறையானது தற்ஓது சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மற்றூம் தாமபுரம் காவல் ஆணையகரத்திற்கு வாங்கப்பட்ட புதிய போலீஸ் ஜீப்கள் நேற்று சென்னை சாலைகளில் தென்பட்டது. வழக்கமாக காணப்படும் வெள்ளை நிறம், நீல நிறம் அல்லது அடர் மெரூன் நிறம் கொன்ட போலீஸ் கார்களுக்கு பதிலாக சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளோடு புதிய கார்கள் காணப்படுகின்றன. .

லண்டனில் இதே சிவப்பு நிற கார்கள் போலீசார் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லண்டனில் பயன்படுத்தப்படும் அந்த சிவப்பு நிற கார்கள் உலகம் முழுக்க பிரபலம். இது அவசர ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் கார்கள்.

அதாவது அவசரமாக செல்ல வேண்டிய ரோந்து போலீஸ் கார்கள் இப்படி சிவப்பு நிறத்தில் இருக்கும். தற்போது ஆவடி, தாம்பரத்தில் இதே போன்ற சிவப்பு நிற கார்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் ரோந்து பணிக்காக இந்த கார்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆணையரகங்களுக்கும் 10 புதிய ரக ரோந்து வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்லது.

logo
Kalki Online
kalkionline.com