வாணர்குல வீரனிடம் இருப்பது
ஓலைகளா? ஓலைப் பட்டாசுகளா?
நாம் சிரித்தால் தீபாவளி.. இவன் சிரித்தால்?
பெண்கள் அதோ கதி!
சரவெடிகளாய் ஆங்காங்கே
கொளுத்திப் போட்டு
ஆனந்தமாய் பயணிக்கும்
‘வம்பு வெடி’யான்!
’விர்’ எனப் பாயும் ராக்கெட் வேகம்
‘திண்’ என மிளிரும் வசீகர தேகம்!
அபார வீரன்
திக்விஜய தீரன்
மக்கள் செல்வன் - தமிழ்
மண்ணுலக மாமன்னன்
பார் போற்ற வாழ்ந்தனன்
விண்ணுயுர உயர்ந்தனன்!
ஆடாத ஆட்டம் ஆடி, படாத பாடு படுத்தும்
தனாதிகாரி, தான்யாதிகாரி,
64 விழுப்புண்கள் கொண்ட சர்வாதிகாரி
ஆட்டம்பாம் கணக்குல ச்சும்மா அதிருதில்ல!
கையில் என்னவோ மத்தாப்பு; மனசெல்லாம் கொந்தளிப்பு!
அழகி - ஆணவக்காரி - சுந்தரி - சூழ்ச்சிக்காரி
மத்தாப்பாய் சிரித்து
மாந்தரை மயக்கும் மோக(ச)க்காரி!
சக்கரத்தைக் கையிலேந்தி (சோழநாட்டை)
காக்கும் தேவதையாய்;
அறிவில் சிறந்து விளங்கி
சுற்றிச் சுழன்று வென்ற தாரகையாய்....