பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரம்: தனி விசாரணைக் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரம்: தனி விசாரணைக் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி கடந்த 5- ம் தேதியன்றூ காலையில் பஞ்சாப் மாநிலம், பதிண்டா விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடம் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சாலையை வழிமறித்தனர். இதனால் பிரதமரின் பயண திட்டம் கேன்சலாகியது. இதனால்

தேசிய தியாகிகள் நினைவிடம் மற்றூம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.. இந்நிலையில், இன்று காலை மீண்டும் தலைமை நீதிபதி ரமணாவின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதிகல் உத்தரவிட்டதாவது;

பிரதமரின் பாதுகாப்பு விவகார குளறூபடி தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்கள் விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதுகுறீத்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் தனி விசாரணை குழு அமைக்கப்படும். அதில் சண்டீகர் காவல்துறை தலைவர், தேசிய புலனாய்வுத்துறை ஐஜி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற பதிவாளர், பஞ்சாப் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆகியோர் இடம்பெறுவார்கள்.

இவ்வாறூ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com