புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவுநாள்: அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மலரஞ்சலி!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவுநாள்: அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மலரஞ்சலி!
Updated on

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 34-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி, சரஸ்வதி, செங்கோட்டையன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

logo
Kalki Online
kalkionline.com