”இதோ வர்றான் பாரு ராஜேஷ்! வந்தவுடன் புலம்புவான் பாரு!” என்று நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் கலாய்த்தான்.
”பிரெண்ட்ஸ்! நான் எது செய்தாலும் தடங்கல், வேலை சட்டுன்னு முடிய மாட்டேங்குது ”என்று புலம்பி நண்பன் கலாய்த்ததை உறுதி செய்தான்.
”சரி! சரி ஆரம்பிச்சுட்டியா? என்ன வேலை? என்ன தடங்கல்?”
"என்னோட ஐந்து லட்சத்த ரொக்கமாய் முதலீடு போட்டு பிசினஸ் ஆரம்பித்தேன். பிசினஸ் டல்லுதான்டா!”
”அப்புறம்!” என்றான் இன்னொரு நண்பன்.