FIFA உலக கோப்பை கால்பந்து: அரபு நாடு அசத்தல்!

FIFA உலக கோப்பை கால்பந்து: அரபு நாடு அசத்தல்!
Published on

-ஆர். நாகராஜ மூர்த்தி.

க்கிய அமீரகத்தின் கத்தார் நாட்டில்  நவம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்காக வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை  ஈர்க்கும் வகையில் புதுமையான விசா வழங்கும் திட்டத்தை அந்நாடு அறிவித்துள்ளது.

இந்த கால்பந்து போட்டி அரபு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக் கோப்பைப் போட்டியாகும், மேலும் 2002-ம் ஆண்டுத் தென் கொரியா மற்றும் ஜப்பானில் நடந்த போட்டிக்குப் பிறகு ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது உலகக் கோப்பை போட்டியாகும். இந்த வருடத்துக்கான போட்டியில்  சர்வதேச அளவிலான 32 அணிகள் பங்கேற்கப் படவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த FIFA உலகக் கோப்பை 2022 போட்டியை கத்தார் நாட்டில் பார்க்க விரும்புபவர்கள், அந்நாட்டின் Hayya card என்கிற சிறப்பு விசாவை வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஹய்யா கார்டு வைத்திருப்பவர்கள், 90 நாட்களுக்குள் அமீரகத்துக்குள் பலமுறை நுழையும் விசா அளிக்க முடிவு செய்துள்ளது.

– இந்த சிறப்பு விசா குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது;

ஹய்யா கார்டு என்பது கத்தாரில் நடக்கும்  FIFA உலகக் கோப்பை போட்டியை பார்க்க விரும்பும் வெளிநாட்டு ரசிகர்களுக்கான என்ட்ரி விசா அல்லது fan id ஆகக் கொடுக்கப்படுகிறது. இநத சிறப்பு விசாவானது இந்த வருடம் நவம்பர் 1-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

அதாவது இந்த வருடம் நவம்பரில் தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி 23-ம் தேதி வரையில் கத்தாருக்குச் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் ஹயா அட்டை கட்டாயமாகும்.

ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் சாதாரண விலையில் மேலும் 90 நாட்களுக்கு விசாவை நீட்டிக்க முடியும். அத்துடன் இந்த சிறப்பு அட்டை பெறுபவர்கள் கத்தார் நாட்டிற்கு நுழைவது மட்டும் அல்லாமல் ஸ்டேடியம் செல்லவும், அந்நாட்டின் மெட்ரோ ரயில் மற்றும் பஸ்ஸில் இலவசமாகப் பயணிக்கலாம்.

-இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

என்ன.. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்க்க கத்தார் கிளம்பிட்டீங்களா?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com