தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு: இன்று முதல் ஆரம்பம்!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு: இன்று முதல் ஆரம்பம்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 6999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் இரண்டு அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு ஆயிரத்து 1930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணி முதல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆரம்பமாகிறது. இதில் முதல் நாள் இன்று சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும். அதன்பின்னர் வரும் 30-ம் தேதிமுதல் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com