தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

Published on

புத்தாண்டு தொடங்கியபின் இந்த ஆண்டின்முதல்சட்டசபைகூட்டக் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றபின் நடக்கும் இந்த முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியபின், ஆளுநர் ஆர்.என். ரவி'வணக்கம்'எனதமிழில் கூறிதனது உரையை தொடங்கினார்.

இந்நிலையில், கவர்னர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்புசெய்தனர். அம்மாகிளினிக் மூடல், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துகவர்னர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்புசெய்தனர்.

logo
Kalki Online
kalkionline.com