தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலானவை: சுகாதாரத் துறை செயலர்!

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலானவை: சுகாதாரத் துறை செயலர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் பருவ கால நோய்களான டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.

இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பிஒய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

மாவட்ட ஆட்சியர்கள் ததம் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; மழை காலங்களில் ஏற்படும் டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும்; நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்

–இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com