தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து நேற்று பிற மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விஷயத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்து அறிவிக்கலாம்.

இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து இன்று மேலும் 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com