Thavarai Unarthum vizhippunarve Manachatchi!
Thavarai Unarthum vizhippunarve Manachatchi!https://tamil.gizbot.com

தவறை உணர்த்தும் விழிப்புணர்வே மனசாட்சி!

ஏப்ரல் 5, சர்வதேச மனசாட்சி தினம்
Published on

விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்தும் ஒரு அத்தியாவசிய அறிவுசார் பண்பு மனசாட்சி ஆகும். சர்வதேச மனசாட்சி தினம் ஏப்ரல் 5 அன்று உலக அமைதியை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படும் நாளாகும்.

உலக அமைதி மற்றும் அன்பின் கூட்டமைப்பு (FOWPAL) பிப்ரவரி 5, 2019 அன்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச மனசாட்சியின் பிரகடனத்திற்கான உலகளாவிய பிரச்சாரத்தை துவங்கியது. தொடர்ந்து பஹ்ரைன் இராச்சியம் ‘அன்பு மற்றும் மனசாட்சியுடன் அமைதி கலாசாரத்தை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் ஒரு வரைவு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) அதன் 73வது அமர்வில், ஜூலை 25, 2019 அன்று, அந்த வரைவுத் தீர்மானத்தை ஏற்று, ஏப்ரல் 5ம் தேதியை சர்வதேச மனசாட்சி நாளாக அறிவித்தது.

மனசாட்சி என்பது தவறான மற்றும் சரியான விஷயங்களை விளக்குவதற்கான ஒரு நபரின் அறிவுத்திறன். ஒருவரின் செயல்கள் அல்லது நோக்கங்கள் தார்மீக ரீதியாக சரியானவை அல்லது தவறானவை என்பதை உணர்த்தி சரியானதைச் செய்ய வேண்டிய கடமை உணர்வுடன் இருக்கும் விழிப்புணர்வு நிலைதான் மனசாட்சி என அறியப்படுகிறது.

சர்வதேச மனசாட்சி தினம் பற்றிய தகவல்கள் குறைந்த அளவே இருந்தாலும், இந்த தினத்தின் மகத்துவம் பற்றி நாம் சிந்திக்க ஒரு வாய்ப்பாக இந்த நாளைக் கருதலாம். ஒவ்வொரு நாளும் நம் மனம் விரும்பாத விஷயங்களைக் காணும்போதும் நமது மனசாட்சி மறைந்து போகவேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் புத்தர் சிலையை எந்த இடத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?
Thavarai Unarthum vizhippunarve Manachatchi!

திருமண வீடுகளில் வீணாகும் உணவுகள் பசித்த எவருக்கும் பிரயோஜனமின்றி வீதியில் கொட்டப்படுவதைப் பார்க்கும்போதும், பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை ஆதரவின்றி நடுத்தெருவில் தவிக்க விடும்போதும், நெருக்கடி காலங்களில் இஷ்டத்துக்கு விலையேற்றி பணம் சம்பாதிப்பவர்களை காணும் போதும் என இப்படி எண்ணற்ற தர்மத்தை மீறிய செயல்களால் நம் மனசாட்சி வேதனையை அனுபவிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. மனசாட்சியை அடகு வைத்து விட்டு பொருந்தாத வாழ்க்கையை வாழ்ந்து வேதனைப்படுபவர்களே இங்கு அதிகம்.

நம்மைப் படைத்த மகேசனுக்கு கூட பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அவர் நமக்குத் தெரிய மாட்டார். ஆனால், மனசாட்சிக்குத் துரோகம் செய்தால் மடியும் வரை குற்ற உணர்வில் வேதனைப்பட வேண்டும். ஆகவே, மனசாட்சி சொல்வதை அலட்சியம் செய்யாமல் நல்ல செயல்களை செய்து வாழ்வதை இந்த நாளில் உறுதி செய்வோம்.

logo
Kalki Online
kalkionline.com