திருமலை தரிசனம்!

திருமலை தரிசனம்!

நீங்கள் திருப்பதி,  திருமலை புனிதப் பயணம் தொடங்கும்முன் உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை வணங்குங்கள்.

திருமலையில் உங்கள் பயணம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள்.

திருமலையில் குளத்தில்   அருகே உள்ள  வராஹ ஸ்வாமியை வணங்குங்கள். பின் வேங்கடவனை வணங்கச் செல்லுங்கள்.

பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியின் சன்னதிக்குள் நுழையும்முன் குளித்துவிட்டு, சுத்தமான பாரம்பரிய ஆடைகளை அணியவும்.

கோயிலுக்குள் இருக்கும்போது ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

முழு அமைதியைக் கடைப்பிடித்து, கோயிலுக்குள் “ஓம் நமோ ஸ்ரீ வெங்கடேசாய” என்று மனதில் வேண்டுங்கள்.

திருமலையில் உள்ள பாபவினாசனம் மற்றும் ஆகாச கங்கை தீர்த்தங்களில் நீராடுங்கள்.

திருமலையில் இருக்கும்போது பண்டைய பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்பாடுகளை மதிக்கவும்.

எல்லா பக்தர்களின்  மத உணர்வுக்கு மதிப்பு தரவும்.

உங்கள் காணிக்கைகளை ஶீவிரி உண்டியலில் செலுத்தவும் .

உங்கள் மதச் சார்புக்கு ஏற்ப திலகம் அணியுங்கள்.

கோயிலின் நடைமுறைகளைப் பின்பற்றி, இறைவனின் தரிசனத்துக்காக உங்களின் முறைக்காக காத்திருங்கள்.

இலவசமாக மொட்டை போடலாம்.

திருமலையில் இலவச பேருந்து வசதி உள்ளது.

திருமலையில் செய்யக் கூடாதவை.

றைவனை வழிபடுவதைத் தவிர, வேறு எந்த நோக்கத்துக்காகவும் திருமலைக்கு வர வேண்டாம்.

அதிக நகைகள் மற்றும் பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டாம்.

கோயிலின் வளாகத்திலும் அதைச் சுற்றிலும் பாதணிகளை அணிய வேண்டாம்.

தங்குமிடம் மற்றும் தரிசனத்துக்காக புரோக்கர்களை அணுக வேண்டாம்.

கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தை வீணாக்காதீர்கள்..

திருமலையில் இருக்கும்போது அசைவ உணவுகளை உண்ணவோ அல்லது மதுபானம் அல்லது பிற போதை மற்றும் புகைபிடிக்கவோ கூடாது.

கோயில் வளாகத்திற்குள் ஹெல்மெட், தொப்பி, தலைப்பாகை போன்றவற்றை அணிய வேண்டாம்.

கோயில் வளாகத்தில் வன்முறை அல்லது கடுமையான செயலைச் செய்யாதீர்கள்.

வரிசையில் உங்கள் முறைக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, தரிசனத்துக்கு விரைந்து செல்ல வேண்டாம்.

திருமலை கோயிலில் பூக்களை அணிய வேண்டாம், ஏனெனில் புனிதமான ஏழுமலையானின் அனைத்து மலர்களும் இறைவனுக்கு மட்டுமே.

பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள்.

கோயில் வளாகத்திற்குள் எச்சில் துப்பவோ, தொல்லை தரவோ கூடாது.

திருமலைக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் உரிமம் பெற்ற ஆயுதங்கள் / வெடிமருந்துகளை வைத்திருக்கும் பக்தர்கள் அதை அலிபிரி சோதனைச் சாவடியில் அறிவித்து, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com