திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசித் திருவிழா!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்


திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஐப்பசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. கடந்த ஜூலையில் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட பழைமையானது இக்கோயில்.இந்தத் திருத்தலத்தின் காலடியை  வட்டமாகச் சுற்றி பரளியாறும், கோதையாறும் செல்வதால் திருவட்டாறு என்று இந்தத் தலத்திற்கு பெயர் பெற்றது. பரளியாறும், கோதையாறும் திருவட்டாறைச் சுற்றி வந்து மூவாற்று முகத்தில் சங்கமம் ஆகிறது. ஆற்றுத் தண்ணீர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலை அடித்துச் சென்றுவிடக்கூடாது என்று பூமா தேவி இந்த கோயில் நிலத்தை மட்டும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தியதாக சொல்கிறது தலவரலாறு.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்



சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோயில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிசேடனைப் படுக்கையாக கொண்டு ஆழ்ந்ததுயிலில் ஆழ்ந்துள்ள 22 அடி நீளமுடைய ஆதிகேசவபெருமாளின் திருமேனி 16008 சாளகிராம கற்களால் செய்யப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி அருகிலுள்ள கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆதிகேசவ பெருமாளை காண அவனது அருளை பெற திரண்டு வருகின்றனர். தென்னிந்திய அளவில்  வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதக்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
ஐப்பசி திருவிழாவின் முதல் நாளான நாளை காலை  8.30 முதல் 9.30 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெறுகிறது. தொடர்ந்து  சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரண்டாம் நாள்  இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல்,  இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்பவரம் கதகளி, 3.ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல்,  இரவு 10 மணிக்கு தட்ச யாகம் கதகளி ஆகியன நடக்கிறது. 

நான்காம் நாள் இரவு 7 மணிக்கு  ராமாயண பாராயணம்,  இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல்,இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி, 5.ம் நாள் இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று,  தொடர்ந்து கருடவாகனத்த்தில்சுவாமி பவனி வருதல், நள சரிதம் கதகளி ஆகியனவும், 6.ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி   நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி ஆகியனவும், 7.ம் நாள்  இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல் தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

8.ம் நாள் இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி,9.ம் நாள் இரவு  8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 10. நாள் காலை 6 மணிக்கு ராமாயாண பாராயணம், காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு  தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு  1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com