தற்போது ஒரு திரைப்படம் 25 நாள்கள் ஓடினாலே வெற்றிப்படம் என்கிறோம் இப்போது. ஆனால் ஒரு படம் 1,000 நாள்கள், அதாவது மூன்று தீபாவளியைக் கொண்டாடியது. அந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. அதை நிகழ்த்தியவர் தான் தியாகராஜ பாகவதர். அந்த திரைப்படம் 'ஹரிதாஸ்'.
சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் மார்ச் 1, 1910 மாயவரத்தில் பிறந்தவர். இவர்களது பெற்றோர் மாயவரம் திரு கிருஷ்ணமூர்த்தி மாணிக்கத்தம்மாள் .
தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் உயர் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மற்றும் ஏழிசை மன்னர் என போற்றப்படும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். ஒருவர் எம்.கே. கோவிந்தராஜ பாகவதர் கர்நாடக சங்கீத வித்துவான். இன்னொருவர் எம்.கே.சண்முகம்.
சொந்தமாக திருச்சியில் நடத்தி வந்த இரசிக இரஞ்சன சபாவில் நடந்து வந்த அரிச்சந்திரா நாடகத்தில் அரிசந்திரனின் மகனாக லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் நடித்தார்.
அரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன். அவருக்குக் கருநாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்றாா. அதேநேரத்தில் நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார். இவா் இசையிலும், நடிப்பிலும் சிறந்து விளங்குவார் என வாழ்த்தி நடேச அய்யர் அவா்கள் ""பாகவதா்"" என்ற பட்டத்தை வழங்கினாா். அதனால் தியாகராஜன் என்ற பெயருடன் இணைந்து பாகவதர் என்ற பட்டத்துடன் சேர்த்து தியாகராஜ பாகவதா் என்று பெயர் ஏற்பட்டது.
1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய எம்.கே.டி சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர், அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக வலம் வந்தவை. 1944 இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 வருடம் சென்னை பிராட்வே திரையரங்கில் ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியப்படம் இதுதான். பல நாடகங்களில் பெண் வேடம் புனைந்து நடித்தவர்.
எம்.கே.டியின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றியப் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. 1942 தொடங்கி பலமுறை அவர் திருச்சி வானொலியிலும் பாடியுள்ளார்
இரண்டாம் உலகப்போர் 1939-ல் தொடங்கிய போது . ’யுத்த நிதி’ திரட்ட பாகவதர் கச்சேரி செய்தார். பெரும் தொகை வசூலானது. அதற்காக திவான் பகதூர் பட்டம்தர பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. அதனை பாகவதர் நிராகரித்தார். இன்று பெல் நிறுவனம் அமைந்துள்ள திருவறும்பூர்ப் பகுதியை அரசு வழங்க முன்வந்தது. பாகவதரோ நான் செய்தது உதவி. பிரதிபலனாக எதுவும் வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டார்.
தியாகராஜ பாகவதராய் போல வாழ்ந்தோரும் இல்லை! அவரை போல் வீழ்ந்தோரும் இல்லை!