இளையராஜாவின் 1417வது படம்! 

இளையராஜாவின் 1417வது படம்! 
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

–லதானந்த் 

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் 1417-வது படமாக உருவாகி வருகிறது 'நினைவெல்லாம்  நீயடா' திரைப்படம். இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் மற்றும் சினாமைகா நடித்திருக்கிறார்கள்.

மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்–யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது. 

இந்த படத்தின் பாடல்களை பழனி பாரதி, சினேகன் எழுதியிருக்கிறார்கள். 'இதயமே, இதயமே' என்று தொடங்கும் ஒரு பாடலை இளையராஜா எழுதியிருக்கிறார்.

அந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். மாஸ்டர்கள் தினேஷ், தினா ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர்‌‌.  

பள்ளிப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும்  இந்தப் படத்தைச் சென்னை, கொடைக்கானல், திருப்போரூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் 41 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் ‌இயக்குநர் ஆதிராஜன்.  

இறுதி நாள் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது. கொட்டும் மழையில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி மற்றும் மாணவியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

மாலையில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

தற்போது படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

logo
Kalki Online
kalkionline.com