நூறு வயது தம்பதி! 

நூறு வயது தம்பதி! 

Published on

–லதானந்த் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி.தொட்டி கிராமத்தில் வசிக்கும் முனியப்பா (100), அவருடைய மனைவி குண்டம்மா (எ) மாரம்மா (96) ஆகியோர் நூறாண்டு கடந்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நூற்றாண்டு வைரவிழாவைக் குடும்பத்தார் கொண்டாடினார்கள்.  

தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில், நூறாண்டு கடந்து வைர விழா கொண்டாடும் தம்பதிக்குப் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கெட்டி மேளம் கொட்டி மலர் மாலைகள் அணிவித்து திருமணம் நடைபெற்றது.  

இந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காகவே வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சொந்தபந்தங்கள் வந்திருந்து விழா களைகட்டியது.

logo
Kalki Online
kalkionline.com