செல்லப் பிராணியுடன் ஷாப்பிங்!

செல்லப் பிராணியுடன் ஷாப்பிங்!

லதானந்த்

 விஜய் டிவி புகழ் சிவாங்கி, White swan events எனும் நிறுவனத்தோடு கைகோர்த்து live concert ஒன்றை முதன்முறையாகச் சென்னையில் நிகழ்த்துகிறார் இந்நிகழ்ச்சி செப்டம்பர் நாளை (செப்டம்பர் 9) சென்னை பீனிக்ஸ் மாலில்  நடைபெற உள்ளது.

இதில்  சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார். மேலும் சிவாங்கியோடு சேர்ந்து சந்தோஷ் பாலாஜி, செபஸ்டியன், வி.ஜே.கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியை நடத்தும் white swan events நிறுவனம் கூறுகையில், "The autumn Flea 2022 என்ற தலைப்பில் நாங்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். இதில் முதல் நாள் விஜய் டிவி புகழ் சிவாங்கியின் லைவ் கான்செப்ட் நடைபெற உள்ளது.

இரண்டாவது நாள், டிஜே பிரசாந்த்தின்  டிஜே நிகழ்ச்சியும் மூன்றாவது நாளாக Dream Zone நடத்தும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பிரித்விராஜ் மற்றும் கருண் ராமன்  கலந்து கொள்கிறார்கள்.

நீங்கள் இதுவரை செல்லப் பிராணிகளை அழைத்து வந்து ஃபீனிக்ஸ் மாலில்  ஷாப்பிங் செய்திருக்கமாட்டீர்கள் ஆனால் இந்த முறை இந்த 3 நாள் சிறப்பு நிகழ்ச்சிகலின்போது உங்களுக்குப் பிடித்த செல்லப் பிராணிகளை  அழைத்து வந்தும் ஷாப்பிங் செய்யலாம்.

-இவ்வாறு தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com