45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன கோயில் லட்டு!

45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன கோயில் லட்டு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம், 45 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பிரசித்தி பெற்ற மரகத ஸ்ரீலட்சுமி விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட லட்டு தயாரிக்கப்பட்டு, விநாயகருக்கு படைக்கப் படும்.

பின்னர் இந்த லட்டு பிரசாதம் ஏலம் விடப்படும். இதில் கிடைக்கும் தொகை, கோவில் மேம்பாட்டு பணிக்கு செலவிடப்படும்.இதேபோல் இந்தாண்டு 12 கிலோ எடையுள்ள லட்டு தயாரிக்கப்பட்டு, நேற்று ஏலம் விடப்பட்டது. இந்த லட்டை தெலுங்கானாவைச் சேர்ந்த வெங்கட ராவ் – கீதாப்ரியா தம்பதியினர் 45 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர்.

-இது குறித்து வெங்கட ராவ் கூறியதாவது:

இந்த கோயில் லட்டை ஏலம் எடுத்தால் ரொம்பவும் அதிர்ஷ்டமாகக் கருதப் படுகிறது. விநாயகரின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காகவே ஏலம் எடுத்துள்ளோம். எங்களுக்கு மட்டுமல்ல.. நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் விநாயகர் ஆசி கிடைக்க வேண்டுகிறோம்.

-இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com