பணிப்பெண் இல்லத் திருமணத்தில் விக்ரம்!

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் விக்ரம்!

லதானந்த்

டிகர் சீயான் விக்ரம் தனது வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

விக்ரம் தன்னுடன் பணியாற்றும் சக  ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம்.அந்த வகையில் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்த  ஒளிமாறன் என்பவரது மனைவியான மேரி கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார்.

மேரியின் மகன் தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினிக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வைபவத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com