தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்க, நமது முத்தையா மட்டும் குடி பெருமை,செண்டிமெண்ட், சொந்தத்திற்குள் திருமணம் என விருமனில் கதை விட்டு இருக்கிறார்.
தாசில்தாராக இருந்து தாசில்தார் வேலையே செய்யாத அப்பா (பிரகாஷ் ராஜ் ) தன் அம்மாவின் (சரண்யா )மரணத்திற்கு காரணமாகிறார். இதனால் மகன் விருமன்(கார்த்தி ) அப்பாவை வெறுக்கிறார்.
இவர்களின் பிரச்சனையை பெரிதாக்கி இருவரையும் காலி செய்ய நினைக்கிறது வில்லன் கோஷ்டி. இறுதியில் வழக்கம் போல பிரகாஷ் ராஜ் திருந்தி விடுகிறார். பலமுறை சொன்ன இந்த கதையில் எந்தவித புதிய திரைக்கதை யுக்தியும் இல்லாமல் தந்திருகிறார் டைரக்டர்.
இந்த படத்தில் ஜாதிய அடையாளங்கள் இல்லை. ஆனால் சில ஆண்டுகளாக வெளிவரும் தென் மாவட்ட கதைகளில் பேசப்படும் குடி பெருமை,ஒரே இனத்துக்குள், உறவுகளுக்குள் திருமண பந்தம் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகின்றன.
இந்த திருமணங்கள் ஜாதியை இன்னமும் வலுப்படுத்துகின்றன. கல்வி அறிவு குறைவாக இருந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் கூட ஜாதி தாண்டி, மதம் தாண்டி காதலை கொண்டாடி உள்ளது.
கல்வி அறிவு அதிகம் பெற்றுள்ள இந்த கால கட்டத்தில் உறவு முறை திருமணங்களை வலியுறுத்தலாமா? தமிழ் நாட்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். இன்னமும் இது போன்ற சிந்தனைகளை சினிமாவில் வளர்கலாமா?
விருமன் படத்தில் ஒரே ஆறுதலான விஷயம் கார்த்தியின் நடிப்புதான். அதிதி நடிப்பு சுமார் ரகம். இன்னமும் வடிவுக்கரசியை எத்தனை காலத்துக்கு கொடுமையான பெண்மணியாக காட்டபோகிறார்களோ தெரியவில்லை. தென் மாவட்டங்களில் பல பிரச்சனகள் உள்ளன. முத்தையா தனது அடுத்த படத்தில் அவற்றை சொல்வார் என்று எதிர் பாப்போம்.
விருமன் –இன்னமும் விறுவிறுப்பாக சிறப்பித்து இருக்கலாம்.