நடிகர் ஒய் ஜி மகேந்திராவுக்கு  விருது! 

 நடிகர் ஒய் ஜி மகேந்திராவுக்கு  விருது! 

-சந்திரமெளலி. 

சென்னையின் கே.எஸ்.கே. அறக்கட்டளை சார்பில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா உள்ளிட்ட ஆறுபேருக்கு "சாம்பியன்ஸ் ஆஃப் சென்னை" விருது வழங்கப்பட்டது 

சென்னையில் இயங்கி வரும் கேஎஸ்கே அறக்கட்டளை கலை, கல்வி, தொழில்முனைவு, சுகாதாரம், அறிவியல், சமூகப்பணி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய  சென்னை குடிமக்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக "சாம்பியன் ஆஃப் சென்னை" விருது வழங்கி கௌரவித்து வருகிறது.   

இந்த ஆண்டுக்கான விருது ஒய் ஜி மகேந்திரா (கலை), வித்யா சுப்ரமணியம் (கல்வி), ஆர்கிடெக்ட் சி.ஆர். நாராயண ராவ் (தொழில்துறை), டாக்டர் தங்கராஜன் ராஜ்குமார் (உடல்நலம்), சேவாலயா (சமூக சேவை), டிரீம் ரன்னர்ஸ் (விளையாட்டு) ஆகியோருக்கு வழங்கப்பட்டது 

சென்னை மாநகர ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்.விழாவுக்கு தலைமைதாங்கி விருது வழங்கினார். பரதநாட்டியக் கலைஞர் பிரியதர்ஷிணி கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விருதாளர்களுக்கு  விருதுப் பத்திரங்களை வழங்கினார் 

விருது வழங்கும் விழா, சென்னை மைலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி அரங்கில் நடைபெற்றது. விருது பெற்ற நாராயண ராவ், சேவாலயா முரளீதரன் இருவரும் பி எஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள். அவர்கள் தாங்கள் படித்த பள்ளி வளாகத்தில் தங்கள் பணிக்காக விருது பெறுவதை பெருமையாகக் குறிப்பிட்டனர் 

சென்னை மாநகர  ஆணையர் ககந்தீப் சிங், சுமார் ஓராண்டுக்கு முன் தான் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டபோது தினமும்  7500க்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் இருந்ததாகவும்  ஒரே மாதத்தில் அது 200-க்கும் கீழே குறைந்தது.

அதற்கு முக்கிய காரணம் சென்னை மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைபிடித்ததுதான் என்றார்.மேலும் அந்த காலகட்டத்தில் ஏராளமான டாக்டர்களும், சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், இளைஞர்களும் ஏராளமான உதவிகளை செய்ய ஆர்வத்துடன் முன்வந்ததை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

மேலும் தான் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியபோது ஏற்பட்ட சுனாமி மற்றும் கடும் வெள்ளத்தை சமாளித்த  அனுபவங்களையும் அப்போது மக்கள் அளித்த ஒத்துழைப்பையும் குறிப்பிட்டார் 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com