யார் இந்த ஷேக் ஹசீனா வாசித்?

Sheikh Hasina Wasid
Sheikh Hasina Wasid!
Published on

பங்களாதேஷின் தற்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா வாசித், பங்களாதேஷின் அரசியல் களத்தில் நீண்ட காலமாக தனது தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார். அவர் பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட வீரர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் என்பது மட்டுமல்லாமல், பங்களாதேஷின் அரசியல் நிலைப்பாட்டை உலக அளவில் உயர்த்தியுள்ள ஒரு தலைவராகவும் திகழ்கிறார். இவர் வங்காள தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி மற்றும் முதல் பெண் பிரதமர் என்ற பல சிறப்புகளைக் கொண்டவர். தனது தைரியம், தன்னம்பிக்கை, தீர்க்கமான முடிவுகள் மூலம் வங்காளதேசத்தை உலக அரங்கில் ஒரு முக்கிய நாடு என்று நிலைக்கு உயர்த்தியவர். 

ஆரம்பகால வாழ்க்கை: ஷேக் ஹசீனா வாசித், 1947 ஆம் ஆண்டு, ஜூன் 28ஆம் தேதி, துஞ்சிபாராவில் பிறந்தார்.‌ இவரது தந்தை முஜிபுர் ரஹ்மான் வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். ஷேக் ஹசீனா தனது இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, தன் தந்தையுடன் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.‌

அரசியல் வாழ்க்கை: 1971 ஆம் ஆண்டு, வங்காளதேசம் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற போராடியபோது, ஷேக் ஹசீனா அதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர், பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளிலிருந்து தப்பி, இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்தர். இந்தியாவில் இருந்துகொண்டே வங்காளதேச சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

1975 ஆம் ஆண்டு வங்காளதேசம் சுதந்திரம் பெற்ற பிறகு, ஷேக் ஹசீனாவின் தந்தை முர்ஜிபுர் ரஹ்மான் பிரதமரானார். ஆனால், அதே ஆண்டு நடந்த ஒரு ராணுவக் கலவரத்தில் அவரது முழு குடும்பமும் கொல்லப்பட்டது. இதில் தப்பித்த ஷேக் ஹசீனா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பின்னர், பல ஆண்டுகள் கழித்து 1981 ஆம் ஆண்டு வங்கதேசம் திரும்பினார்.‌ 

முதல் பெண் பிரதமர்: வங்காளதேசத்திற்கு திரும்பிய பிறகு, ஷேக் ஹசீனா வங்காளதேச அவமி லீக் கட்சியின் தலைவர் ஆனார். பல தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்ட போதிலும் தனது கட்சியை வலுப்படுத்தி, வங்காளதேசத்தின் அரசியலில் முக்கிய சக்தியாக மாற்றினார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஷேக் ஹசீனா வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமரானார். இவர் தனது ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், நாட்டில் நிலவும் ஊழல், குற்ற செயல்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார். 

சவால்கள்: இவரது அரசியல் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. பலமுறை இவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டது. இவரது குடும்பத்தினரும் அரசியல் எதிர்பாளர்களால் கொல்லப்பட்டனர். இருப்பினும், இவர் தனது உறுதியான மனப்பான்மையால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். ஷேக் ஹசீனாவின் நிர்வாகத்திறன் வங்கதேசத்தின் நீண்ட காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெருமையை அவருக்கு பெற்றுத்தந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். 

இதையும் படியுங்கள்:
பில்கேட்சிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 5 வாழ்க்கை பாடங்கள்!
Sheikh Hasina Wasid

தற்போதைய நிலை: சில தினங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் திடீரென வெடித்த மாணவர் போராட்டத்தால், மோசமான பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, தனது பதிவை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார் ஹசீனா. இப்போது அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். திடீரென வெடித்த மாணவர் போராட்டத்திற்கு வங்கதேசம் சுதந்திரம் பெற்றபோது இருந்த வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீட்டு முறையை மீண்டும் நிறுவியது காரணமாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பொருளாதார சவால்களால் விரக்தி அடைந்த மாணவர்களையும், பொதுமக்களையும் பழைய ஒதுக்கீட்டு முறை கோபப்படுத்தியது. 

ஹசீனாவின் இந்த திடீர் பதவி விலகல் பங்களாதேஷ் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதால், நாட்டின் அரசியல் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com