

"காலநிலை மாற்றம் கவனம் தேவை" இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த அழியாத பரிசு. அதை முறையாக பயண்படுத்தி பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். இயற்கையை காப்பதோடு எதிா்காலத்தையும் காப்போம்.
இயற்கையை பாதுகாப்பதன் வாயிலாக சுற்றுச்சூழல் சீரழியாமல் இருக்க நமக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கிய அம்சமாகும். இதை வலியுறுத்தும் நோக்கமாக ஆண்டு தோறும் ஜூன் 5 ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) கடைபிடிக்கப்படுகிறது. 1974 ம் ஆண்டு முதல் இந்த நாளானது தேச அளவில் அதிகாரபூா்வமாக கொண்டாடப்படுகிறது.
''2026 ம் ஆண்டின் கருப்பொருள்"
இயற்கையால் ஈர்க்கப்பட்டது கால நிலைக்காக அதோடு நமது எதிா்காலத்திற்காக மனித குலத்தின் எதிா்காலத்தை பாதுகாக்க இயற்கையோடு இணைவோம்.( "Inspired by Nature for Climate For Our Future")
சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதன் தாக்கங்களும்
இன்று அசுரவேகத்தில் வளா்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பருவநிலை, காலநிலை, இயற்கை மாற்றம், இவைககளால் புவி வெப்பமயமாகுதல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்ததி வருகிறது.
மரம் வெட்டுதல், இயற்கை வளங்களை அழித்தல், பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் , இவைகளின் தாக்கம், மாசுக்கட்டுப்பாடு சரியில்லாத சூழலால் தனிமனித சுகாதார கவனக்குறைவு, ஆகிய இனங்களால் பாதிப்புகளே அதிகம்.
இதற்கு தீா்வுகாண மைய , மாநில, அரசுகள் எவ்வளவு நல்ல பல திட்டங்கள், விழிப்புணர்வுகள், ஏற்படுத்தினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல் படமுடியும். பிளாஸ்டிக்பொருட்கள் உபயோகத்தை தவிா்த்து மாற்று ஏற்பாடாக துணிப்பை போன்ற இனங்களை பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழலை வளமைப்படுத்த இயற்கை வளங்களை பெருக்கலாம். காடுகளை தேவையில்லாமல் அழிக்காமல் மரங்களை வளா்க்கலாம். பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்கள் உபயோகத்தைஅறவே தவிர்க்கலாம்.
ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியப்படும் நெகிழிகளால் எவ்வளவு ஆபத்து என்பதை உணர்ந்து மாற்றுப் பொருள் உபயோகிக்கலாம். அது நம் கையில்தான் உள்ளது.
நீாின்றி அமையாது உலகு என்பதைப்போல மனிதனின் அத்தியாவசிய தேவையான குடிநீரை சிக்கனமாக உபயோகிப்பதே சிறப்பான ஒன்று.
அதேநேரம் மழைநீா் வீணாகி கடலில் கலப்பதால் என்ன நன்மை அதை சேமிக்க வீடுகள் தோறும் மழைநீா் சேமிப்புத்தொட்டி கட்டலாம். அதேபோல மேலும் ஒரு அத்யாவசிய தேவையான மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்கலாம்.
வீடுகளில் தொழிற்சாலைகளில் வர்த்தக நிறுவனங்களில் அரசின் மான்யத்தோடு சோலாா் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப் படுகிறது என்பதற்காக தேவைக்கு பயண்படுத்துவதே நல்லது.
எரிபொருள் சிக்கனம் கடைபிடிக்கலாம். இப்படி நமது கையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விஷயங்கள் நிறையவே உள்ளது. அவற்றை சமுதாய பொறுப்போடு நாம் கடைபிடிப்பதே நமது கடமையாகும்.
இருப்பது ஒரு பூமி. மனித உடலுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல பூமியும் நமது உடல் போலத்தான் அதற்கு மாசு ஏற்படாதவாறு நமது செயல்பாடுகளை வளர்த்து எதிா்கால சந்ததியினர் இயற்கை இடர்பாடு இல்லாமல் வாழ நாம் வழிவகை செய்வதே இந்த தேசத்திற்கு நாம் செய்யும் தலையாய கடமையாகும்.
இதைத்தான் இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாா் தனது கருத்தாக,
"இயற்கைக்கு மனிதன் கடிவாளம் போடமுடியாது, இயற்கையின் மீது மனிதன் குதிரை சவாாி செய்ய முடியாது"
"அப்படி செய்ய முயற்சித்தால் இயற்கை நம்மை திருப்பித்தாக்கும்"! என்ற அவரது அருமையான கருத்திற்கிணங்க இயற்கை வளங்களை பாதுகாப்போம் எதிா்கால சந்ததிகளின் வாழ்வை மேம்படுத்துவோமாக "!