ஊராட்சிமன்ற தலைவர்:  மாமியார் vs  – மருமகள் போட்டி!

ஊராட்சிமன்ற தலைவர்: மாமியார் vs – மருமகள் போட்டி!

Published on

ஊத்துக்காடு கிராம ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு மாமியார் – மருமகள் எதிரெதிர் வேட்பாளர்களாக  போட்டியிடுவது பரபரப்பிக் கிளப்பியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியானது பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு பல்வேறு தரப்பினரும் விண்ணப்பித்து வரும் நிலையில் இதே கிராமத்தை சார்ந்த சாவித்ரி மணிகண்டன் என்ற 40 வயது பெண்மணி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.  சாவித்ரிக்கு எதிராக இதே பதவிக்கு அவரது

மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (வயது 61), போட்டியிட விண்ணப்பித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.

இந்த  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய மாமியாரும் மருமகளும் ஒன்றாகப் புறப்பட்டு ஒரே நேரத்தில் வந்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது..

logo
Kalki Online
kalkionline.com