கேரளாவில் அதிதீவிர கனமழை: 2 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரளாவில் அதிதீவிர கனமழை: 2 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
Published on

கேரளாவில் இடுக்கி, திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி தீவிர கன மழைக்கான "ரெட் அலர்ட்" டும் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான "ஆரஞ்ச் அலர்ட்"டும், இதர மாவட்டங்களுக்கு கன மழைக்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்கு பருவமழைக் காலமாகவும் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழைக் காலம் முடியும் தருவாயை நெருங்கியுள்ள நிலையில், கேரளா முழுமைக்கும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.வரும், அக்டோபர் முதல் தேதி வரை மழை தொடரும் எனவும்

வானிலை மையம் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. வானிலை மைய முன்னறிவிப்பை தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com