கொலை வழக்கில் தலைமறைவான திமுக எம்.பி இன்று கோர்ட்டில் சரண்!

கொலை வழக்கில் தலைமறைவான  திமுக எம்.பி இன்று கோர்ட்டில் சரண்!
Published on

கடலுார் தி.மு.. எம்.பி.-யான ரமேஷின், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராசு (60) என்பவர் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து, எம்.-பி ரமேஷ், அவரது உதவியாளர் உட்பட 6 பேர் மீது கொலைவழக்கு பதிவானது. இதையடுத்து ரமேஷ் தலைமறைவானர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளியன்று (அக்டோபர் 8) தேதி நடராஜ், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.., எம்.பி., ரமேஷை தேடும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் முதலாவது மாஜிஸ்திரேட் கற்பகவள்ளி முன்பு திமுக எம்.பியான ரமேஷ் இன்று சரணடைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com