நீட் தேர்வு அச்சம்: மேலும் ஒரு மாணவி தற்கொலை!

நீட் தேர்வு அச்சம்: மேலும் ஒரு மாணவி தற்கொலை!

Published on

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி, அத்தேர்வில் மதிப்பெண் தேவையான மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருணாநிதி. இவர் தனது 2-வது மகள் கனிமொழியின் படிப்பு வசதிக்காக துளாரங்குறிச்சியில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். கனிமொழி தன் 12-ம் வகுப்பில் 93% மதிப்பெண் எடுத்து தேர்வாகியுள்ளார். இந்நிலையில் கனிமொழி கடந்த 12-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கலந்துகொண்டு எழுதியுள்ளார். ஆனால் அத்தேர்வில் போதுமான அளவு மார்க் கிடைக்காது என்ற அச்சத்தில் மாணவி கனிமொழி சோர்வாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தனுஷ் எனும் மாணவர் ஒருவர் நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com