பஞ்சாப்  புதிய முதல்வர், சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்பு.

பஞ்சாப் புதிய முதல்வர், சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்பு.

Published on

பஞ்சாப்மாநிலத்தின்புதியமுதல்வராகசரண்ஜீத்சிங்சன்னி(58) இன்றுகாலைபதவியேற்றார். இவருக்குஆளுநர்பன்வாரிலால்புரோஹித்பதவிப்பிரமாணம்செய்துவைத்தார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை நேற்று முந்தினம் (செப்டம்பர் 18) ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சண்டீகரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு சரண்ஜீத் சிங் சன்னி தோந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப்மாநிலத்தின்முதல்வராகஇன்று சரண்ஜீத்சிங்ச

சன்னி (58) பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர்பன்வாரிலால்புரோஹித்பதவிப்பிரமாணம்செய்துவைத்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்லது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com