பிரான்ஸ் அதிபர் மீது பொதுக்கூட்டத்தில் முட்டை வீசிய நபர்! வைரல் வீடியோ!

பிரான்ஸ் அதிபர் மீது பொதுக்கூட்டத்தில் முட்டை வீசிய நபர்! வைரல் வீடியோ!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

பிரான்ஸில் சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் மீது ஒரு நபர் முட்டையை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்சில் உள்ள சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது திடீரென்று கூட்டத்தில் இருந்து ஒரு நபர் அதிபர் மீது முட்டையை வீசினார். உடனடியாக அதிபரின் பாதுகாவலர்கள் முட்டை வீசிய அந்நபரை மடக்கி பிடித்தனர்நவர் அதிபர் மீது எற்காக முட்டை வீசினார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன் பொது இடங்களில் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் பொதுமக்களுக்கு அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் பாய்ந்து வந்து அதிபர் இமானுவேலை கன்னத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com