பிரிட்டனில் நிலவும் சிக்கல்கள்: குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற பிரதமர்!

பிரிட்டனில் நிலவும் சிக்கல்கள்: குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற பிரதமர்!

Published on

பிரிட்டனில் முக்கியமான 6 பிரச்சினைகள் தீவிரமெடுத்த நிலையில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்ட்தியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் மனைவி கேரி மற்றும் மகன் வில்ஃப் ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) மார்பெல்லாவுக்கு விடுமுறையுடன் கூடிய உல்லாச பயணம் சென்றுள்ளார். இதையடுத்து கோஸ்டா டெல் சோலில் உள்ள சொகுசு வில்லாவில் அக்டோபர் 14-ம் தேதி வரை தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் ஓய்வெடுக்க சென்றுள்ள நிலையில் அந்நாட்டில் ஆறு முக்கிய பிரச்சினைகள் நிலவி வருகிறது.

அவை எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள்கள் விலையேற்றம், மாதாந்திர உதவித்தொகை ரத்து, எரிபொருள் டேங்கர்களை இயக்க ராணுவம் வரைவு செய்யப்பட்டது, உணவு விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட 6 சிக்கல்கள் ஆகும்.

இவ்வாறு பிரிட்டனில் முக்கிய சிக்கல்கள் நிலவி வரும் சூழலில் பிரதமர் ஓய்வெடுக்க சென்றிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com