லக்கிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு!

லக்கிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு!

Published on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் அரசு விழா ஒன்றுக்கு, அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா, மற்றும் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர்.

அப்போது மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் வந்ததாகவும், அவருக்குப் பாதுகாப்பாக வந்த தொண்டா்களின் கார் மூலம் அந்த போராட்ட விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே விவசாயிகள் மீது காரில் மோதுவதை உறுதிபடுத்தும விடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லக்கீம்பூ ருக்கு நேற்று சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தர ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுவதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த ஆணையம் இரண்டு மாதங்களில் விசாரணை முடித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com