லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்:  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின்  பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய குடியரசின் 2-வது பிரதமரும்,விடுதலைப் போராட்ட வீரருமான லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, டெல்லி விஜய் காட்டிலுள்ள அவரது நினைவிடத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நமது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தேசத்தின் சிறந்த குடிமகனாக முழு அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் தேசத்திற்கு சேவை செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரது எளிமை, நடத்தை மற்றும் நேர்மை அனைத்து மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com