வரலாற்றிலேயே முதன்முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
விண்வெளி சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்ட 4 அமெரிக்கர்களும் இந்த சுற்றுலாவுக்காக 9 மாதங்கள் பிரத்தியேக பயிற்சிகள் மேற்கொண்டனர். அதன் பின்னர் விண்வெளி சுற்றுலா செல்வதற்கான முழுதகுதி பெற்றனர். பின்னர் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.32 மணிக்கு அவர்களை ஏற்றிகொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலம் அடுத்த 3 நாட்கள் பூமியை சுற்றிவிட்டு, பின்னர் தரையிறங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.