#Breaking டி20 நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு !

ரோஹித், கோலி, சூர்யகுமார் அசத்தல் ஆட்டம்!
இந்தியா vs  நெதர்லாந்து
இந்தியா vs நெதர்லாந்து
Published on

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்றைய போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய நேரப்படி இந்தப்போட்டியானது பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோஹித் ஷர்மா 39 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் கோலியுடன் இணைந்தார். இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை உயர்த்தினர்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

விராட் கோலி சில அதிரடியான ஷாட்களை ஆடி அரைசதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62, ரோஹித் ஷர்மா 53, சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தனர்.

டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில், இந்திய அணி தற்போது நெதர்லாந்து அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ரோஹித், கோலி, சூர்யகுமார் அசத்தல் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்ததுள்ளது இந்திய அணி. நெதர்லாந்து அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com