ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் மகளிர் அணி!

19th Asian game Indian women cricket team
19th Asian game Indian women cricket team
Published on

சீனாவில்கடந்த 23ம் தேதி தொடங்கிய ஆசிய கிரிக்கெட்போட்டியில் இலங்கையை மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று (செப். 25) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன், இலங்கை அணி மோதியது. ஹாங்சோ பிங்ஃபெங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களையும் எடுத்தனர். ஆனால், மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 116 ரன்களை குவித்தது. பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர ஆகிய இலங்கை பந்துவீச்சாளர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்பின் களம்கண்ட இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. நட்சத்திர வீரர் சமாரி அட்டப்பட்டு உள்ளிட்ட டாப் ஆர்டர்கள் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்களும் பெரிதாக ரன்களை சேர்க்காததால், இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

குறிப்பாக, இந்திய பந்துவீச்சில் டிடாஸ் சாது 3, ராஜேஸ்வரி கெயக்வாட் 2, தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வத்ஸர்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம், பங்கேற்ற முதல் ஆசிய விளையாட்டு தொடரிலேயே தங்கம் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com