20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மற்ற கிரிக்கெட் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய நேர போட்டியாகவும், அதிரடியாக ஆடி ரன்களை குவித்து ரசிகர்களை குஷிப்படுத்தும் போட்டியாகவும் அமைந்திருப்பதே அதற்கு காரணம். இந்த போட்டிக்கு தலைமை தாங்கி அதிக வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்த கேப்டன்கள் பற்றிய பார்வை.
புகழ்பெற்ற விக்கெட் கீப்பர், கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.தோனி, 72 போட்டிகளுக்கு தலைமை தாங்கி 41 வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார். 28 தோல்விகளை இந்திய அணி சந்தித்திருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்திருக்கிறது.
வெற்றி சதவீதம்: 56.94.
கடந்த ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா 62 போட்டிகளுக்கு தலைமை தாங்கி இருக்கிறார். அதில் 49 வெற்றிகளை குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 12 தோல்விகளை அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது.
வெற்றி சதவீதம்: 79.03.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட்கோலி 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை 50 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். அதில் 30 வெற்றிகளையும், 16 தோல்விகளையும் இந்திய அணி சந்தித்தது. இவரது தலைமையில் 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது.
வெற்றி சதவீதம்: 60.00
இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக விளங்கும் ஹர்திக் பாண்டியா 16 போட்டிகளுக்கு கேப்டனாக விளங்கினார். அதில் 10 வெற்றிகளும், 5 தோல்விகளும் இந்திய அணிக்கு கிடைத்தது. ஒரு போட்டி டிராவை சந்தித்தது.
வெற்றி சதவீதம்: 62.50