
உலக கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டித் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இரு அணிகளுக்குமே இது 8-வது போட்டியாகும். ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் தோல்விகண்டது. லக்னெளவில் நடைபெற்ற 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. 3-வது போட்டியில் இலங்கை அணியையும், நான்காவது போட்டியில் பாகிஸ்தானையும் ஆஸ்திரேலியா வென்றது. தில்லியில் அக் 25 ஆம் தேதி நடைபெற்ற 5-வது போட்டியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது. தர்மசாலாவில் நடைபெற்ற 6-வது போட்டியிலும் ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 4 ஆம் தேதி ஆமதாபாதில் நடைபெற்ற 7-வது போட்டியில் இங்கிலாந்தை ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணியிடம் வீழ்ந்தது. தில்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அக்டோபர் 15 இல் தில்லியில் நடைபெற்ற 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அக் 18 ஆம் தேதி சென்னை, சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் நியூஸிலாந்து அணியில் ஆப்கானிஸ்தான் 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னையில் அக். 23 இல் நடைபெற்ற 5-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. புனேயில் நடைபெற்ற 6-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னையில் நடைபெற்ற 7-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹாஸ்லிவுட்.
ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜர்தான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா ஓமர்சாய், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அகமது மற்றும் பஸுல்லாஹ் பரூக்கி.