
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் நெதர்லாந்து சுருண்டது. நெதர்லாந்தை ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2015 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை போட்டியில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்த்து. எனினும் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றையை கைப்பிடித்தது. இப்போது நெதர்லாந்தை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 104 ரன்கள் எடுத்த்தும் மாக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் சதம் (106) அடித்ததும் சிறப்பு அம்சமாகும். அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலிய அணியின் கதாநாயகன் கிளென் மாக்ஸ்வெல். 40 பந்துகளில் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் அய்டன் மார்கரம் 49 பந்துகளில் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த மாக்ஸ்வெல், அடுத்து மின்னவேகத்தில் ஆடி 13 பந்துகளில் மேலும் 50 ரன்களை குவித்தார்.
டேவிட் வார்னரும் தனது பங்குக்கு சிறப்பாக ஆடி சதம் அடித்தார். இது அவருக்கு இரண்டாவது சதம் ஆகும். 32 ரன்கள் எடுத்திருந்தபோது வாரனர் ரன்அவுட்டாக இருந்தார். நல்லவேளையாக தப்பித்தார். அதன் பிறகு அவர் உஷார ஆடி 104 ரன்கள் எடுத்தார். வார்னருடன் இணைந்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார். மார்னஸ் லபுஸ்சாக்னே 50 ரன்களைத் தாண்டியபோதிலும் அவர் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.
நெதர்லாந்து பந்துவீச்சாளர்களில் வான் பீக் 4 விக்கெட்டுகளையும், டீ லீட் 2 விக்கெட்டுகளையும் தத் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணியை வீழ்த்துவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆஸி. அணியின் ஆடம் ஜம்பா சிறப்பாக பந்து வீசி 3 ஓவர்கள் மட்டும் வீசி 8 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹாஸில்வுட் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இறுதியில் நெதர்லாந்து அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.
வருகிற 28 ஆம் தேதி ஆஸ்திரேலியா, தர்மசாலாவில் நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது.