2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை - ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து!

Australia vs Netherlands
Australia vs Netherlands

உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் சென்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா, இன்று நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது.

உலகக் கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று தில்லி அருண் ஜேட்லி விளையாட்டு அரங்கில் நடைபெறும் லீக் போட்டியில் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியை சந்திக்கிறது.

ஆஸ்திரலிய அணி ஏற்கெனவே புள்ளிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் நெதர்லாந்து அணியையும் நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்காவை வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிரான போட்டியிலும் மன உறுதியுடன் விளையாடியது.

இன்றைய போட்டியில் நெதர்லாந்தை வெற்றிகொள்வதன் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலியா இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் புள்ளிப் பட்டியலிலும் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு 6 புள்ளிகள் கிடைக்கும். ஆனாலும், இந்தியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு பின்னர்தான் ஆஸ்திரேலியா இடம்பெறும்.

ஆஸ்திரேலியா தொடக்கப் போட்டிகளில் தடுமாறியது. இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்த ஆஸ்திரேலியா, பின்னர் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வென்றது. நெதர்லாந்தை வெல்லும் நிலையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யலாம்.

டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடினால் அக்கட்சிக்கு பலம். பந்துவீச்சில் ஸ்டார்க், ஹாஸல்வுட், ஜம்பா நம்பிக்கை அளிக்கிறார்கள்.

நெதர்லாந்து அணி, தென்னாப்பிரிக்காவை வென்ற உற்சாகத்தில் உள்ளது. மேக்ஸ், விக்ரம்ஜித் சிங், ஆக்கர்மான், டீ லீட் சிறப்பாக ஆடி, பந்துவீச்சாளர்களும் கைகொடுத்தால் வெற்றிக்கு வாய்ப்பு.

வானிலை நன்றாக இருக்கிறது. மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, ஜோஷ் இங்லிஸ் – (விக்கெட் கீப்பர்), கிளென் மாக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா மற்றும் ஜோஷ் ஹாசில் வுட்.

நெதர்லாந்து அணி: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ தெளத், காலின் ஆக்கர்மான், பாஸ் டீ லீட், சைப்ரண்ட் ஏஞ்சல்பிரிசெட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லோகன் வான் பீக், ரோஃல்ப் வான் டர் மெர்வி, ஆர்யன் தத் மற்றும் பால் வான் மீகிரன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com