2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை - இங்கிலாந்து VS நெதர்லாந்து!

England VS Netherlands
England VS Netherlands

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 40-வது ஒருநாள் போட்டியில் இன்று இங்கிலாந்து அணி, நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி புனேயில் மகாத்மா காந்தி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து, நெதர்லாந்து இரு அணிகளுக்கும் இது 8-வது போட்டியாகும். இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

கடந்த அக். 5 ஆம் தேதி ஆமதாபாதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தர்மசாலாவில் நடைபெற்ற 2-வது போட்டியில் (அக்.10) இங்கிலாந்து வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. நான்காவது போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணியிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்விகண்டது. 5 வது போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. 6-வது போட்டியில் இந்தியாவிடம் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற 7-வது போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவிடம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நெதர்லாந்து அணி, அக். 6 ல் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2-வது போட்டியில் (அக்.9) நியூஸிலாந்து அணியிடம் நெதர்லாந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அக். 17 இல் தர்மசாலாவில் நடைபெற்ற 3-வது போட்டியில் நெதர்லாந்து அணி, தென்னாப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 4-வது போட்டியில் (அக். 21) இலங்கையிடமும், 5-வது போட்டியில் (அக். 25) ஆஸ்திரேலியாவிடமும் (309 ரன்கள் வித்தியாசத்தில்) நெதர்லாந்து தோல்வி அடைந்தது. கொல்கத்தாவில் அக். 28 இல் நடைபெற்ற 6-வது போட்டியில் நெதர்லாந்து வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 3 இல் நடைபெற்ற 7-வது போட்டியில் நெதர்லாந்து ஆப்கானிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி: ஜானிபார்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, லியம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லே, கஸ் அட்கின்ஸன், பிரைடன் கார்ஸ் மற்றும் ஆதில் ரஷீத்.

நெதர்லாந்து அணி: மாக்ஸ் ஓ தெளத், வெஸ்லி பர்ரேஸி, காலின் ஆக்கர்மான், சைபிராண்ட் ஏஞ்சல்பிரெசெட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பாஸ் டீ லீட், லோகன் வான் பீக், ரோஃல்ப் வான்டர் மெர்வி, ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீகிரன்.

வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். மழைபெய்வதற்கான அறிகுறிகள் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com