இங்கிலாந்தை அதிரடியாக வீழ்த்தியது இந்தியா!

India defeated England
India defeated England

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை  இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது. இந்தியா இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ரோகித் சர்மா எடுத்த 87 ரன்களும், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவின.

அடுத்து வருகிற நவம்பர் 2 ஆம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா நான்காவது முறையாக அரையிறுதியை சந்திக்கும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள்தான் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றியை கைப்பிடித்துள்ளது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய ஐந்து அணிகளுக்கு எதிரான போட்டியிலும் இந்தியா ரன்களை துரத்திச் சென்றே வெற்றிபெற்றுள்ளது.

லக்னெள ஏக்தா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட் செய்ய வைத்தது. முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 129 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்திய அணி ஆட்டத்தை தொடங்கிய போதிலும் 12 ஓவர்களில் 40 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் நின்று ஆடி 87 ரன்கள் குவித்தார். அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை.

 இறுதியில் இகைப்பந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களில் வில்லே 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ், ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்து இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அரையிறுதியை எட்ட முடியாவிட்டாலும் இந்தியாவை வெற்றிகொள்ளலாம் என நினைத்தது. ஆனால், அதன் கனவு பலிக்கவில்லை. தொடக்கத்திலேயே சறுக்கல் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்தின் முதன்மை ஆட்டக்காரர்கள் பும்ரா மற்றும் ஷமி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வீழ்ந்தனர். ஜான் பார்ஸ்டோவ் (14), தாவித் மலான் (16), ஜோ ரூட் (0), பென் ஸ்டோக்ஸ் (0) ஆகிய நால்வரும்  அவுட்டாயினர். நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து துணிச்சலுடன் ஆடவில்லை என்றோ சொல்ல வேண்டும். கேப்டன் ஜோஸ் பட்லர் 10 ரன்களில் வீழ்ந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com