உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்தியாவின் சவாலை சமாளிக்குமா நியூஸிலாந்து!

India vs new zealand
India vs new zealand

உலக கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்திய அணியும் நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டத்தின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், நான்குவது இடம் பிடித்த நியூஸிலாந்து அணியும் மோத உள்ளன.

லீக் சுற்றுப் போட்டியில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து, இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்  முனைப்பில் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற  உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறிய இந்திய அணி, இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் வகையில் நியூஸிலாந்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும்.

மும்பை வான்கடே ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம்.

இன்றைய அரையிறுதி போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், நியூஸிலாந்து அணியின் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்திருப்பதால் வான்கடே ஸ்டேடியத்தில் டாஸ் வெற்றி, தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடந்த உலக கோப்பை அரையிறுதி இந்தியா தோல்வி அடைந்தாலும், இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடுவதில்தான் எங்கள் கவனம் உள்ளது என்று தெரிவித்தார்.

நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து கூறுகையிஸ், இந்திய அணியினர் சிறப்பாக விளையாடுகின்றனர். அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகப்பெரிய சவால் என்பதை நாங்கள் அறிவோம். லீக் சுற்றுப் போட்டி முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்டத்தை எட்ட நாங்கள் முதலில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

எங்களை குறைவாக மதிப்பிடுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. களத்தில்  இறங்கி விளையாடும்போது எங்களுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கலாம். லீக் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடியது என்ற போதிலும் நாங்களும் ஓரளவு நன்றாகவே விளையாடியுள்ளோம். இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பை போட்டி அரையிறுதில் ஆடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.

இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டால்  ஓவர்கள் குறைக்கப்படலாம். ஆட்டம் முழுமையாக தடைப்பட்டால் அதிக புள்ளிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com