தென்னாப்பிரிக்காவுக்கு த்ரில்லிங் வெற்றி!

South Africa defeat pakistan
South Africa defeat pakistan

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா த்ரில்லிங் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் நான்காவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினர். எனினும் பாகிஸ்தான் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருவரின் விக்கெட்டுகளையும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சென் வீழ்த்தினார்.

 அடுத்து களத்தில் இறங்கிய கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து 48 ரன்கள் சேர்த்தனர். ரிஸ்வான் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெரால்டு கோட்ஸீ வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இப்திகார் அகமது 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷம்ஸி பந்துவீச்சில் கிளாஸனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கேப்டன் பாபர் ஆஸம் 50 ரன்கள் எடுத்திருந்தபோது சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். எனினும் ஷாதாப்கான் மற்றும் ஷவுத் ஷகீல் இருவரும் ஓரளவு நின்று ஆடி 86 ரன்கள் குவித்தனர். ஷாதாப் 43 ரன்கள் எடுத்திருந்தபோது கோட்ஸீ வீசிய பந்தில் மகாராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஷவுத் ஷகீல் தொடர்ந்து ஆடி 52 ரன்கள் எடுத்தார். ஆனாலும், ஷம்ஸி வீசிய பந்தில் அவரும் அவுட்டாகி வெளியேறினார். முகமது நவாஸ் மெதுவாக ஆடி 24 ரன்கள் சேர்த்தார். ஆனால், ஜான்சென் வீசிய பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களில்  ஷம்ஸி 4 விக்கெட்டுகளையும், ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், கோட்ஸீ 2 மற்றும் நகிடி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 271 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா களத்தில் இறங்கியது. நான்காவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டீ காக் 24 ரன்களில் அஃப்ரிடி வீசிய பந்தில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து கேப்டன் டெம்பா பவுமா, வாஸிம் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து அய்டன் மார்கரமுடன் சேர்ந்து 54 ரன்கள் எடுத்த ராஸி வாண்டர் டஸ்ஸன், உஸாமா மிர் (பதிலி ஆட்டக்காரர்-பந்துவீச்சாளர்) பந்தில் அவுட்டானார். அதிரடி ஆட்டக்காரரான கிளாஸனும் 12 ரன்களில் வாஸிம் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா 136 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 271 ரன்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் மார்கரம் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த மில்லர், அஃபிரிடி வீசிய பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஜான்சென் தொடக்கத்திலேயே அடித்து விளையாட முற்பட்டார். எனினும் 20 ரன்களில்  அவுட்டாகி வெளியேறினார்.

மார்கரம் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உஸாமா பந்துவீச்சில் பாபர் ஆஸமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த 91 ரன்களில் 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.

இன்னும் நான்கு விக்கெட்டுகள் இருந்த நிலையில், பத்து ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா  இருந்தது. இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொண்டு வெற்றியை கைப்பிடிக்க பாகிஸ்தான் முயன்றது. மார்கரமைத் தொடர்ந்து கோட்ஸீயும் பெவிலியனுக்கு திரும்பினார்.

தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மகாராஜவும், ஷம்ஸியும் மட்டுமே களத்தில் இருந்தனர். இந்த நிலையில் நவாஸின் பந்தை மகாராஜ் பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதியில் 271 ரன்களை எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தானை வீழ்த்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com